Friday, August 26, 2011

பங்கு வர்த்தகம் செய்யும் முறைகள்

பங்கு சந்தை கற்றுக்கொள் பாகம் -6

முந்தைய பாகம் படிக்க 

நண்பர்களே கடந்த பதிவில் முதலீட்டாளர் ,வர்த்தகர் ,யூகத்தின்
அடிப்படையில் வர்த்தகம் செய்பவர் என்று பார்த்தோம்.



யூகத்தின் அடிப்படையில் என்பது சீட்டு விளையாடுவது என்பது போல அதாவது சூதாட்டம் ,தயவு செய்து இந்த முறை வர்த்தகம் வேண்டவே வேண்டாம் .

அடுத்து முதலீட்டாளர்கள் (INVESTER)என்பதையும் பார்த்தோம் ,
இம்முறையில் குறைந்த பட்சம் மூன்று அல்லது ஐந்து வருடங்கள் காத்திருந்தால் மட்டுமே நல்ல லாபம் பார்க்க முடியும் .

இதிலும் குறுகிய கால முதலீட்டாளர்கள் (SHORT TERM INVESTER)


நீண்ட கால முதலீட்டாளர்கள் (LONG TERM INVESTER )என்று 
இரு வகையினர் உள்ளனர் 

அடுத்ததாக வர்த்தகர் TRADER

இதில் தின வர்த்தகர் (DAY TRADER) ,


குறுகிய கால வர்த்தகர் (SHORT TIME TRADER),


நீண்ட கால வர்த்தகர் என்று வகையினர் உண்டு (LONG TIME TRADER) .

தின வர்த்தகர் என்பவர் வர்த்தக தினமான அன்றே பங்கை வாங்கி ,
அன்றே விற்று கணக்கை முடித்து கொள்வார் .லாபமோ ,நஷ்டமோ
இவர் வர்த்தகத்தை அன்றே முடித்துக் கொள்வார் .

ஏனென்றால் அடுத்த நாள் தொடக்கம் மற்றும் முடிவு தான் எதிர்பர்க்கமுடியாததாய் இருக்கலாம் .அதனால் பாதுகாப்பாக
அன்றே முடித்துக் கொள்வார் .

குறுகிய கால வர்த்தகர் வர்த்தக தினத்தில் வாங்கி மறு நாளோ
அல்லது அந்த வாரமோ ,அல்லது மாதமோ அதாவது அந்த மாத
எக்ஸ்பயரி தேதிக்குள் வர்த்தகம் முடித்துக் கொள்வார் .

மற்றது மூன்று மாதத்திற்குள் வர்த்தகம் முடித்துக் கொள்வார் .

சரி நண்பர்களே வர்த்தகத்தின் மூன்று நிலைகளை (முறைகள் )
பற்றி தெரிந்து கொண்டீர்கள் .

இப்பிடி வர்த்தகம் செய்ய என்னென்ன தெரிய வேண்டும் ,
எத்தனைப் பார்த்து வர்த்தகம் செய்ய வேண்டும்.

பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய ஃ பண்டமண்டல் ,டெக்னிகல் ,
யூகத்தின் அடிப்படையில் வர்த்தகம் செய்யலாம் .இந்த
தலைப்புகளை கடந்த பதிவில்ம் குறிப்பிட்டிருந்தேன் .

இந்த பதிவின் தொடக்கத்திலே சொல்லியுள்ளது போல் யூகத்தின் அடிப்படையில் பங்கு சந்தையில் வர்த்தகம் வேண்டாம் .

இது விலை ஏறும்,இது விலை இறங்கும் என்று கண்மூடித்தனமாக
தேர்வு செய்து பங்கை வாங்கி கையை சுட்டுக் கொள்ள வேண்டாம் .

மற்றபடி ஃ பண்டமண்டல் ,டெக்னிகல் தெரிந்து கொண்டால்
பங்குசந்தையில் துணிந்து வர்த்தகம் செய்யலாம் .

இவ்விரண்டையும் பற்றியும் தெளிவாக வரும் பதிவில்
பார்க்கலாம் நண்பர்களே .

அதற்கு முன் நாம் பங்குகளை வாங்கும் முன் கவனிக்க
வேண்டிய விஷங்கள் மூன்று .இதனையும் முதலீடு செய்யும்
முன் பார்க்கணும் நண்பர்களே .

முதலீட்டுக்கு முன் கவனிக்க வேண்டிய மூன்று விசயங்கள் 

நல்ல நிறுவனங்களாக பார்த்து .


நல்ல டிவிடென்ட் தரும் நிறுவனங்களாக பார்த்து 


விலை குறைவான நேரமாக பார்த்து 




நிறைய டிவிடென்ட் தரும் நிறுவனமாக இருக்கும். ஆனால்,
நிறுவனத்தின் நிர்வாகம் சரியிருக்காது.


டிவிடென்ட் தராத நிறுவனமாக கூட இருக்கும் .இதையெல்லாம்
நாம் ஃபண்டமன்டலில் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும்

ஒரு பேருந்து இருக்கு என்றால் அது எந்த இடத்திற்கு போகிறது
என்று தெரிவது தான் அடிப்படை அதாவது ஃபண்டமண்டல்.

அந்த பேருந்து எந்தெந்த வழிகளில் (ரூட்டில் ) போகிறது அல்லது
போக போகிறது என்று தெரிந்து கொள்வது தான் டெக்னிகல் விஷயம்.

எதுக்கு போக வேண்டிய இடம் தெரிந்தால் ஏறி உட்கார்ந்து கொள்ள வேண்டியது தானே என்கிறீர்களா .

ஹா ஹா போகும் வழியில் பேருந்து பஞ்சர் ஆனாலோ , ஆக்சிடன்ட் ஆனாலோ, அல்லது போகும் வழியில் ஏதேனும் பிரச்சனை ஆனாலோ
என்ன செய்வது.

சத்யம் கம்பனி கேள்வி பட்டிருப்பீர்கள் .திவால் ஆயிற்றா
(இப்பொழுது ரெகவர் ஆகிக்கொண்டுள்ளது ) ,அதில் முதலீடு
செய்தவர்கள் நிலை ?

அதனால் தான் போகும் இடமும் தெரிய வேண்டும் .வழியும்
தெரிய வேண்டும்.இடையில் பிரச்சனை என்று தெரிந்தால்
இறங்கி வேறு வண்டி மாறலாம் .

அல்லது போகும் வழியில் ஏதேனும் பிரச்சனை என்றால் வேறு
ரூட்டில் போகும் என்றால் தொடர்ந்து அதிலேயே பயணிக்கலாம் .

இப்பிடி சமயோசிதமாக தெளிவு பெற்று பங்கு சந்தையில் வர்த்தகம்
செய்ய இந்த இரண்டும் தெரிந்தும் இருக்க வேண்டும் , தெரிந்து
கொண்டேயும் இருக்க வேண்டும்.

ஏனென்றால் பண்டமண்டல் ,டெக்னிகல் இரண்டும் ஒருவண்டியில்
பூட்டிய இரண்டு மாடுகள் போல .

இந்த இரண்டைப் பற்றியும் இனி வரும் பதிவுகளில் தெளிவாக
படிக்கலாம் நண்பர்களே .

தங்கள் கருத்தும் ,வாக்கும் நிறப்பி செல்லுங்கள் நட்புகளே

Tuesday, August 23, 2011

பங்கு வர்த்தகத்தின் அடிப்படைகள் தெரிந்து கொள்ளுங்கள்

பங்கு சந்தை கற்றுக்கொள் பாகம் -5

முந்தைய பாகம் (நான்கு)படிக்க 

நண்பர்களே பங்கு வர்த்தகத்தை எப்பிடி செய்வது என்று நாம் பார்த்து
வருகிறோம். கொஞ்சம் இடைவெளி விழுந்து விட்டது .இனி தொடர்வோம்.



முந்தய பதிவில் குறிப்பிட்டுருந்தேன் நமக்கு எது தேவை முதலீடா
அல்லது வர்த்தகமா என்று தேர்ந்து எடுக்க சொல்லியிருந்தேன் .

முதலில் பங்கு (ஷேர் )என்றால் என்ன வென்று பார்ப்போம் .

ஒருவர் தனிப்பிட்ட முறையில் முதலீடு செய்து வர்த்தகம் செய்தால்
அதில் வரும் லாபம் ,நஷ்டம் முழுதும் அவரையே சேரும்.

அதே போல இருவர் சேர்ந்து முதலீடு செய்து வர்த்தகம் செய்தால்
அதில் வரும் லாபநஷ்டங்கள் இருவரையும் சேரும் .

இந்த வகையில் ஒருவர் அல்லாது நிறைய நபர்கள் (இரண்டோ ,இரண்டாயிரமோ, இரண்டு லட்சமோ என்று சொல்லிக்கொண்டே
போகலாம் )சேர்ந்து வர்த்தகம் செய்தால் அதில் வரும் லாபம்
நஷ்டம் அனைவரையும் சார்ந்தது.

அதாவது ஆயிரம் பேர் சேர்ந்து முதலீடு செய்து வர்த்தகம் செய்து
ரூபாய் பத்தாயிரம் சம்பாதித்தால் ஆளுக்கு நூறு ரூபாய் லாபம்
என்று பங்கு பிரித்து எடுத்து கொள்ளவேண்டும் .
அதனைத்தான்  பங்கு (ஷேர்)என்கிறோம்

தனி நபராக வர்த்தகம் செய்வதை proprietorship என்று சொல்லலாம் .
நிர்வாகத்தை அவர் ஒருவரே பார்த்து கொள்வார்..

இருவரோ, நால்வரோ சேர்ந்து செய்யும்பொழுது அதனை பார்ட்னர்
ஷிப் (partnership) என்று சொல்வார்கள் .நிர்வாகத்தை அனைவரும். பார்த்துகொள்வார்கள்.

மற்றபடி நிறைய நபர்கள் சேர்ந்து நிர்வாகம் செய்யும் பொழுது
அதனை அனைவராலும் நடத்த முடியாது அல்லவா அதனால்
சில நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களை பார்த்து கொள்ள
சொல்வார்கள் நிரவாகத்தை.
அவர்கள் Board of directors என்று அழைக்க படுவார்கள்.

அதே போல இது போல் ஒரு வர்த்தகம் செய்ய வேண்டும் என்று
முதலில் தொடங்குகிறவர் ஒருவர் இருப்பார்.அவர் தான்
உயர்பதவியில் இருப்பார் .ரிலையன்ஸ் அம்பானி போல.

அவரும் பங்குகள் தான் வைத்திருப்பார்.அவர் ஓனர் என்பதால்
அவருக்கு வரும் லாபத்தில் அதிக பங்கு என்று என்ன வேண்டாம்.
அவரிடம் எத்தனைபங்குகள் உள்ளதோ அத்தனை பங்கு (மடங்கு)
லாபம் மட்டுமே அவருக்கு.

அதில் முதலீடு செய்துள்ள அனைவரும் கம்பனியின் உரிமையாளரே .

பங்கு வர்த்தகம் செய்வதை மூன்று வகையாக பிரிக்கலாம்

Invester
Trader
Speculators

Invester s என்றால் முதலீட்டாளர் என்று முன்பு பார்த்தோம் .குறைந்த
விலையில் முதலீடு செய்து விலை ஏறிய பின் விற்று லாபம் பார்ப்பது .
இதில் விலை ஏற்றம் என்பது ஒரு வாரத்திலோ ,மாதத்திலோ
வருடத்திலோ , அல்லது பல வருடங்களோ ஆகும்.

குறைந்த பட்சம் மூன்று அல்லது ஐந்து வருடங்கள் காத்திருந்தால்
நல்ல லாபம் ஈட்டலாம் .



டிரடர் என்றால் தினமும் அல்லது வாரம் அதிகபட்சம் ஆறு மாதம்
வாங்கி விற்று,விற்று வாங்கி லாபம் பார்ப்பார்கள்.

மூன்றாவதாக உள்ளது ஸ்பெகுலேடர் என்பது யூகத்தின்
அடிப்படையில் வர்த்தகம் செய்வார்கள் .உள்ளே வெளியே
சீட்டு விளையாடுவது போல.

சரி நண்பர்களே மீண்டும் அடுத்த பதிவில் பார்ப்போம் .
பிடித்திருந்தால் வாக்களியுங்கள் .

எனது மற்ற தளமான அன்பு உலகம் நேரம் இருக்கும் பொழுது
படியுங்கள் .அதில் இயற்கை மருத்துவம் ,கணினி,மன இயல் .
நகைச்சுவை ,கவிதை ,கண்டு களிக்க காணொளிகள்
போன்றவைகள் உள்ளது .

படித்து பயன் பெறுங்கள் .

தங்களின் மேலான கருத்தை சொல்லுங்கள் .

பங்கு சந்தைப் பற்றி எனது அறிவுக்கெட்டிய வரை எழுதுகிறேன் .
பிழையிருந்தால் பொறுத்தருளுங்கள்

Sunday, August 7, 2011

முதலீட்டு வகைகள்

பங்கு சந்தை கற்றுக்கொள் பாகம் -4

முந்தைய பாகம் படிக்க -பாகம் -3

நண்பர்களே வணக்கம்

கடந்த பதிவில் நாம் பங்கு வர்த்தகத்தில் இறங்கும் முன்
தீர்மானிக்க வேண்டியது முதலீடா ,வர்த்தகமா என்பது பற்றி
பார்த்தோம் .முதலீடு என்றால் உங்களுக்கு தெரியும் .இடம்,
பொருள், நிறுவனம் போன்றவற்றில் முதலீடு செய்து விட்டு
அது முதல் பெருக்கியதும் நாம் திரும்ப பெறுவோம்.
 .
இடம் என்றால் காலி மனையோ ,கட்டிடம் நிறைந்த இடமோ
விவசாய நிலமோ ஏதேனும் ஒன்றில் முதலீடு செய்வோம்.

பொருள் என்றால் தங்கம் ,வெள்ளி,மற்ற தானியங்கள் போன்றவை .
நிறுவனம் என்றால் போஸ்ட் ஆஃபிஸ், பேங்க், மியூச்சுவல் 
ஃபண்ட், பாண்ட் முதலீடு போன்றவை
 .

Friday, August 5, 2011

பங்கு சந்தையில் மூன்று

பங்கு சந்தை கற்றுக்கொள் பாகம் -3

முந்தைய பாகங்கள் படிக்க

பாகம் -1

பாகம் -2
பங்கு சந்தையில் முக்கிய விஷயங்கள் மூன்று

நண்பர்களே முந்தய பதிவுகளில் பங்கு சந்தையில் செய்ய கூடாததையும்,செய்ய வேண்டியதையும் பார்த்தோம் .

இன்று பங்கு சந்தையில் கவனிக்க வேண்டிய மூன்று விஷயங்கள்
அதாவது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் மூன்று
பார்க்க போகிறோம் .

அதற்கு முன்பு நீங்கள் என்ன செய்ய முடிவு எடுத்துள்ளீர்கள்
முதலீடா ,வர்த்தகமா இதில் எதை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்

வர்த்தகம் என்றால் என்ன?

முதலீடு என்றால் என்ன ?

இதைப்பற்றி வரும் பதிவுகளில் விரிவாக பார்ப்போம்

Monday, August 1, 2011

இன்றைய நிப்டி நிலவரம்

இன்று இரண்டாயிரம் ரூபாய் லாபம் 




இன்று காலை நிப்டி ஆனது கேப் அப்பில் தொடங்கியது

அதாவது கடந்த வெள்ளி அன்று நிப்டி ஆனது 5491.00 வர்த்தகம் முடிவடைந்திருந்தது .

இன்று 57 பாயின்ட் அதிகமாக ஓபன் செய்து வர்த்தகம் துடங்கியது .

குறைந்த பட்சம் :-5491.40

Related Posts Plugin for WordPress, Blogger...