Sunday, October 2, 2011

பங்கு சந்தை கற்றுக்கொள் பாகம் -7

முந்தைய பாகம் படிக்க -பாகம் -6



நண்பர்களே முந்தைய பதிவில் முதலீட்டாளர்களின் வகைகள்

முதலீட்டுக்கு முன் கவனிக்க வேண்டியவைகள் பற்றிப் பார்த்தோம்

வர்த்தக சமயத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது
ஃபண்டமெண்டல் மற்றும் டெக்னிகள் இரண்டும் முக்கியம்
என்று பார்த்தோம் .

இதில் பண்டமெண்டல் (Funtamental) பற்றி பார்ப்போம்

ஃபண்டமென்டல் காரணம் எதற்கு என்றால் பங்குகளின் விலை
ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்வதற்கு .

இதற்கு நீங்கள் கவனிக்க வேண்டியது

அரசியல்


பொருளாதாரம்


மனிதவளம்

இவற்றை நீங்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் .ஏன்
இதன் பாத்திப்புகள் தான் பங்கு சந்தையில் பிரதிபலிக்கும் .



அரசியல் தான் நாட்டில் எதையும் முடிவு செய்யும் .இது பெறும்
பிள்ளையே பொருளாதாரம் .

அரசின் கொள்கையால் தான் பொருளாதார வளர்ச்சியும் ,
வீழ்ச்சியும் தீர்மானிக்க படுகிறது.

அதனால் தான் (பிடித்தாலும் பிடிக்க வில்லைஎன்றாலும் )
இந்த அரசியலை கவனிக்க வேண்டும் என்றேன் .

அதனை கவனித்தால் தான் பொருளாதாரம் புரிந்து கொள்ள முடியும்

அடுத்தது

பொருளாதாரம்

ஒருவர் எதற்கு முதலீடு செய்கிறார் ,டைம் பாசிற்காகவா இல்லை
நல்ல வருமானம் ஈட்ட .

அப்பிடி வருமானம் ஈட்ட வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற
சூழ்நிலை நிலவ வேண்டும்.அதுதான் பொருளாதார நிலை .

ஒருவர் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார் என்றால் எப்பிடி
தெரிந்து கொள்வோம் ,அவரது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு,
அவரது ரத்த அழுத்தம் , அவரது மூச்சு திறன் ஈசநோஃபீலியா
போன்றவைகளை செக் செய்து அவரது ஆரோக்கியம்
தீர்மானிப்போம் .



அது போல ஒரு நாட்டின் பொருளாதார நிலை அறிந்துகொள்ள
பல அளவுகோல் உண்டு .

அவற்றில் முக்கியமானவைகள் தினசரி பேப்பர்கள் படிப்பவர்கள் ,
வண்ணப்பெட்டியில் அதாவது ஊடகங்களின் மூலம் தெரிந்து
வைத்திருப்பீர்கள் .

என்னன்னு கேட்கிறீங்களா !

அது....

ஜி .டி.பி.(GDP-)-நாட்டின் மொத்த உற்பத்தி (Gross Domestic Product)


பிஸ்க்கல் டெபிசிட் Fiscal Deficit -அரசின் நிதிப் பற்றாக் குறை


இன்ஃபிளேசன் (Inflation)--பண வீக்கம்


பேலன்ஸ் ஆஃப் ட்ரேட் Balanse of Trade -நாட்டின் ஏற்றுமதி ,இறக்குமதி
வித்தியாசம்

இது இல்லாமல் இன்னும் நிறைய அளவுகோல்கள் உண்டு.

முக்கியமானது இவைகள் தான் .

இவைகள் தெரிந்து கொண்டாலே மற்றவைகள் தெரிந்து விடும் .

நண்பர்களே மற்றவை நாளை......

நன்றி









Related Posts Plugin for WordPress, Blogger...