Sunday, August 7, 2011

முதலீட்டு வகைகள்

பங்கு சந்தை கற்றுக்கொள் பாகம் -4

முந்தைய பாகம் படிக்க -பாகம் -3

நண்பர்களே வணக்கம்

கடந்த பதிவில் நாம் பங்கு வர்த்தகத்தில் இறங்கும் முன்
தீர்மானிக்க வேண்டியது முதலீடா ,வர்த்தகமா என்பது பற்றி
பார்த்தோம் .முதலீடு என்றால் உங்களுக்கு தெரியும் .இடம்,
பொருள், நிறுவனம் போன்றவற்றில் முதலீடு செய்து விட்டு
அது முதல் பெருக்கியதும் நாம் திரும்ப பெறுவோம்.
 .
இடம் என்றால் காலி மனையோ ,கட்டிடம் நிறைந்த இடமோ
விவசாய நிலமோ ஏதேனும் ஒன்றில் முதலீடு செய்வோம்.

பொருள் என்றால் தங்கம் ,வெள்ளி,மற்ற தானியங்கள் போன்றவை .
நிறுவனம் என்றால் போஸ்ட் ஆஃபிஸ், பேங்க், மியூச்சுவல் 
ஃபண்ட், பாண்ட் முதலீடு போன்றவை
 .
முதலீடாக இருந்தாலும் சரி ,வியாபாரமாக இருந்தாலும் சரி
நாம் கவனிக்க போவது மூன்று விஷயங்கள் தான்

1.முதலுக்கு பாதுகாப்பு (SAFETY)
2.முதலுக்கான வருமானம் (RETURNS)
3.அவசர தேவைக்கு முத்தலீட்டை திரும்ப பெறுதல் (LIQUDITY)

இந்த மூன்றையும் நாம் பார்க்க வேண்டும் 
.
முதல் பாயின்டான பாதுகாப்பு என்பது நாம் செய்யும் 
முதலீடானது குறையாமல் இருக்க வேண்டும் .குறிப்பாக
சொல்ல வேண்டும் என்றால் முதலுக்கே மோசமாகி 
விடக் கூடாது .

இரண்டாவது பாயிண்ட் வருமானம் ,நாம் செய்யும் 
முதலீட்டால் நமக்கு கிடைக்கும் வருமானம் .அதாவது நாம்
முதலீடு செய்து திரும்ப பணம் எடுக்கும் பொழுது அது 
எவ்வளவு வருமானத்தை நமக்கு ஈட்டு தருகிறது .
என்றும் பார்க்க வேண்டும் 
.
மூன்றாவதாக நமக்கு பணம் தேவைப்படும்பொழுது உடனே
திரும்ப பெற வழிவகைகள் இருக்க வேண்டும் 
.

நாம் எதில் எதில் முதலீடு செய்கிறோம் என்று  மேலே
பார்த்தோம்.அசையும் சொத்து ,அசையா சொத்து .இவைகளில் .

நாம் முதலீடு செய்வது அசையா சொத்து என்றால் மேலே
சொன்ன மூன்று பாயிண்ட்களை பார்ப்போம்

முதல் பாயிண்ட்டான பாதுகாப்பு இதில் உள்ளது .கட்டிடங்களோ
காலி மனையோ  எதாக இருந்தாலும் முதலீடு பாதுகாப்பு .

இரண்டாவது பாயிண்ட்டான வருமானம் கட்டிடங்களை 
வாடகைக்கு விட்டாலோ நிலங்களில் விவசாயம் செய்தோ 
நமக்கு வருமானம் கிடைக்கிறது என்று வைத்து கொள்வோம்
 .
மூன்றாவது பாயிண்ட்டான நினைத்த நேரத்தில் முதலீட்டை 
திரும்பபெறுதல் .அது சற்று சிரமம் தான் .நினைத்த நேரத்தில் இதனை 
விற்க முடியாது . நாட்களாகும் .அது நமக்கே தெரியும் .

சரி இரண்டாவதாக தங்கம், வெள்ளி இவைகளை பார்த்தோம்
இதில் முதல் குறையாது .நினைத்த நேரத்தில் விற்றும் எடுக்கலாம் .
ஆனால் போதிய வருமானம் குறைவு தான் .மேலும் தங்கமோ 
வெள்ளியோ வீட்டில் வாங்கி வைக்க முடியாது .

மூன்றாவதாக நிறுவனங்கள் முதலீடு ,இதில் நிறுவனங்கள் என்றால்
தொழில் நிறுவனம் சொல்ல வில்லை .அசையும் அசையா இவை இரண்டும் போக பாண்ட் முதலீட்டை பற்றி சொல்கிறேன்
 .
அதாவது இதன் வகைகளை வகைபடுத்துகிறேன் பாருங்கள்.

வைப்புகள் (DEPOSITS)

போஸ்ட் ஆஃபிஸ் ரெக்கொயரிங்  டெபோசிட்
வங்கிகளில் ஃபிக்சட்  டெபோசிட்
நிறுவனங்களில்  ஃபிக்சட்  டெபோசிட்

அரசு திட்டங்கள்

தேசிய சிறுசேமிப்பு திட்டம் (NSC)
பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் (PPF)
கிசான் விகாஸ் பத்திரம் (KVP)

கடன் பத்திரங்கள் (DEBT INSTRUMENTS)

பப்ளிக் செக்டார் பாண்டுகள்
கவர்ன்மென்ட் செக்க்யுரிடிகள்
டிரஷரி பில்ஸ்
மாநில அரசின் பாண்ட்டுகள்
நிறுவங்கள் வழங்கும் டிபின்ச்சர்கள்  
நிதி நிறுவனங்களின் பாண்டுகள்
கமர்சியல் பேப்பர்கள்

பரஸ்பர நிதிகள் (MUTUAL FUNDS )

பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவை
வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவை
இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவை

DERIVATIVE PRODUCTS

ஃ பியுச்சர்ஸ் (FUTURES )
ஆப்ஷன்ஸ் (OPTIONS )
பார்வார்ட்ஸ் (FORWARDS )
வாரன்ட்ஸ் (WARRANTS )
ஸ்வாப்ஸ் (SWAPS)

பங்குகள் (SHARES)

ஈக்வட்டி ஷேர்ஸ் (EQUITY SHARES)
பிரிஃபரன்ஸ் ஷேர்ஸ் (PREFERANCE SHARES )

இத்தனை வகைகள் உண்டு .இதைப் பற்றி நமக்கு முன்பே
தெரிந்திருக்கும் இவற்றில் எதில் வேண்டும் என்றாலும் முதலீடு 
செய்து பணம் சம்பாதிக்கலாம் 
.
நாம் பார்க்க போகும் பங்கு மார்கெட்டுக்கும்,இதற்கும் என்ன 
சம்பந்தம் என்று பார்த்தால் அசையும் ,அசையா சொத்துகளில் 
முதலீடு செய்வது போகமீதம் உள்ளது மேலே குறிப்பிட்டவை
 .
இதில் பணம் போட்டு பணம் எடுக்கிறோம் .இதற்கு மற்ற இரண்டை
போல(இடம் ,பொருள்) நாம் செய்யும் முதலீட்டிற்கு நம் கையில் பொருளாகவோ ,இடமாகவோ இருக்கும் .

ஆனால் மேலே குறிப்பிட்ட வகைகள் பணம் போட்டு பணம்
எடுக்கும் பொழுது நமக்கு அதன் அத்தாட்சிகள் பேப்பர்ஸ் .

இதுபோலத்தான் ஷேர் மார்கெட் .
சரி இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?
அதைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம் நண்பர்களே .

நண்பர்களே பிடித்திருந்தால் வாக்களியுங்கள் நண்பர்களே 
மற்றவர்களுக்கும் இதனை படிக்க .
நன்றி 

எம் .ஆர் 


நன்றி 
ரெபரன்ஸ் : சோம வள்ளியப்பன் 


13 comments:

மாய உலகம் said...

அறிந்துக்கொண்டே வருகிறோம்...நன்றி

RAMA RAVI (RAMVI) said...

மிகவும் அழகாக புரியும்படியாக விளக்கி இருக்கீங்க. நன்றி.

M.R said...

வாங்க மாய உலகம்

தொடர்வுக்கு நன்றி சகோ

M.R said...

வாங்க ராம்வி

தங்கள் வருகைக்கும் ,அன்பான கருத்துக்கும் நன்றி சகோ..

guna said...

thankyou thankyou

M.R said...

வாங்க குணா
வருகைக்கு நன்றி நண்பரே
தொடர்ந்து வாருங்கள்

வாழ்த்துக்கு நன்றி நண்பரே

சம்பத்குமார் said...

நண்பரே ஒவ்வொரு பதிவும் அருமை



நட்புடன்
சம்பத்

M.R said...

நன்றி சம்பத் நண்பரே

Unknown said...

nice and continue yours periodically...
v r expecting more from YOU....

manivannan said...

super sir

Unknown said...

நல்ல பதிவு பொருளை பாதுகாக்கவும் சேமிக்கவும்
உதவும்!

நன்று! நன்றி!

புலவர் சா இராமாநுசம்

Unknown said...

.நன்றி

ATOZ FOREX DETAILS said...

17. உங்களுக்கு நஷ்டமாகின்ற ஒரு தொகை யாரோ ஒருவருக்கு அல்லது சிலரருக்கு லாபமாக போகிறது என்பதே உண்மை. லாபம் அடைகிறவர்கள் என்ன செய்கிறார்களோ அதை நீங்களும் செய்யாமல், லாபம் மட்டும் வர வேண்டும் என்றால் எப்படி வரும்?

18. கடவுளிடம் வேண்டாதீர்கள். நீங்கள் மேலே செல்ல வேண்டும் என்று வேண்டுகிற அதே நேரம் யாரோ ஒருவர் அதே கடவுளிடம் கீழே செல்ல வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருப்பார். பாவம் கடவுள் என்ன செய்வார்? அவர் கன்பீஸ் ஆக மாட்டாரு? சின்னப் புள்ளத் தனமால இருக்கு. இங்கு செய்யும் தொழில் தான் தெய்வம்.

http://atozforexdetails.blogspot.in/2014/03/blog-post.html

Post a Comment

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...