Tuesday, August 23, 2011

பங்கு வர்த்தகத்தின் அடிப்படைகள் தெரிந்து கொள்ளுங்கள்

பங்கு சந்தை கற்றுக்கொள் பாகம் -5

முந்தைய பாகம் (நான்கு)படிக்க 

நண்பர்களே பங்கு வர்த்தகத்தை எப்பிடி செய்வது என்று நாம் பார்த்து
வருகிறோம். கொஞ்சம் இடைவெளி விழுந்து விட்டது .இனி தொடர்வோம்.



முந்தய பதிவில் குறிப்பிட்டுருந்தேன் நமக்கு எது தேவை முதலீடா
அல்லது வர்த்தகமா என்று தேர்ந்து எடுக்க சொல்லியிருந்தேன் .

முதலில் பங்கு (ஷேர் )என்றால் என்ன வென்று பார்ப்போம் .

ஒருவர் தனிப்பிட்ட முறையில் முதலீடு செய்து வர்த்தகம் செய்தால்
அதில் வரும் லாபம் ,நஷ்டம் முழுதும் அவரையே சேரும்.

அதே போல இருவர் சேர்ந்து முதலீடு செய்து வர்த்தகம் செய்தால்
அதில் வரும் லாபநஷ்டங்கள் இருவரையும் சேரும் .

இந்த வகையில் ஒருவர் அல்லாது நிறைய நபர்கள் (இரண்டோ ,இரண்டாயிரமோ, இரண்டு லட்சமோ என்று சொல்லிக்கொண்டே
போகலாம் )சேர்ந்து வர்த்தகம் செய்தால் அதில் வரும் லாபம்
நஷ்டம் அனைவரையும் சார்ந்தது.

அதாவது ஆயிரம் பேர் சேர்ந்து முதலீடு செய்து வர்த்தகம் செய்து
ரூபாய் பத்தாயிரம் சம்பாதித்தால் ஆளுக்கு நூறு ரூபாய் லாபம்
என்று பங்கு பிரித்து எடுத்து கொள்ளவேண்டும் .
அதனைத்தான்  பங்கு (ஷேர்)என்கிறோம்

தனி நபராக வர்த்தகம் செய்வதை proprietorship என்று சொல்லலாம் .
நிர்வாகத்தை அவர் ஒருவரே பார்த்து கொள்வார்..

இருவரோ, நால்வரோ சேர்ந்து செய்யும்பொழுது அதனை பார்ட்னர்
ஷிப் (partnership) என்று சொல்வார்கள் .நிர்வாகத்தை அனைவரும். பார்த்துகொள்வார்கள்.

மற்றபடி நிறைய நபர்கள் சேர்ந்து நிர்வாகம் செய்யும் பொழுது
அதனை அனைவராலும் நடத்த முடியாது அல்லவா அதனால்
சில நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களை பார்த்து கொள்ள
சொல்வார்கள் நிரவாகத்தை.
அவர்கள் Board of directors என்று அழைக்க படுவார்கள்.

அதே போல இது போல் ஒரு வர்த்தகம் செய்ய வேண்டும் என்று
முதலில் தொடங்குகிறவர் ஒருவர் இருப்பார்.அவர் தான்
உயர்பதவியில் இருப்பார் .ரிலையன்ஸ் அம்பானி போல.

அவரும் பங்குகள் தான் வைத்திருப்பார்.அவர் ஓனர் என்பதால்
அவருக்கு வரும் லாபத்தில் அதிக பங்கு என்று என்ன வேண்டாம்.
அவரிடம் எத்தனைபங்குகள் உள்ளதோ அத்தனை பங்கு (மடங்கு)
லாபம் மட்டுமே அவருக்கு.

அதில் முதலீடு செய்துள்ள அனைவரும் கம்பனியின் உரிமையாளரே .

பங்கு வர்த்தகம் செய்வதை மூன்று வகையாக பிரிக்கலாம்

Invester
Trader
Speculators

Invester s என்றால் முதலீட்டாளர் என்று முன்பு பார்த்தோம் .குறைந்த
விலையில் முதலீடு செய்து விலை ஏறிய பின் விற்று லாபம் பார்ப்பது .
இதில் விலை ஏற்றம் என்பது ஒரு வாரத்திலோ ,மாதத்திலோ
வருடத்திலோ , அல்லது பல வருடங்களோ ஆகும்.

குறைந்த பட்சம் மூன்று அல்லது ஐந்து வருடங்கள் காத்திருந்தால்
நல்ல லாபம் ஈட்டலாம் .



டிரடர் என்றால் தினமும் அல்லது வாரம் அதிகபட்சம் ஆறு மாதம்
வாங்கி விற்று,விற்று வாங்கி லாபம் பார்ப்பார்கள்.

மூன்றாவதாக உள்ளது ஸ்பெகுலேடர் என்பது யூகத்தின்
அடிப்படையில் வர்த்தகம் செய்வார்கள் .உள்ளே வெளியே
சீட்டு விளையாடுவது போல.

சரி நண்பர்களே மீண்டும் அடுத்த பதிவில் பார்ப்போம் .
பிடித்திருந்தால் வாக்களியுங்கள் .

எனது மற்ற தளமான அன்பு உலகம் நேரம் இருக்கும் பொழுது
படியுங்கள் .அதில் இயற்கை மருத்துவம் ,கணினி,மன இயல் .
நகைச்சுவை ,கவிதை ,கண்டு களிக்க காணொளிகள்
போன்றவைகள் உள்ளது .

படித்து பயன் பெறுங்கள் .

தங்களின் மேலான கருத்தை சொல்லுங்கள் .

பங்கு சந்தைப் பற்றி எனது அறிவுக்கெட்டிய வரை எழுதுகிறேன் .
பிழையிருந்தால் பொறுத்தருளுங்கள்

17 comments:

தமிழ் உதயம் said...

முதல் முறையாக வந்துள்ளேன். பங்கு வர்த்தகம் குறித்த பதிவு சிறப்பாக உள்ளது. தொடர்ந்து எழுத வேண்டும்.

M.R said...

வாங்க தமிழ் உதயம் நண்பரே தங்களை வரவேற்கிறேன். தொடர்ந்து வாருங்கள் நண்பரே.

கோகுல் said...

மிகவும் பயனுள்ளதாக தொடர்கிறது!நன்றி!

M.R said...

வாங்க கோகுல் நண்பரே தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி

செங்கோவி said...

இன்று அடிப்படைத் தகவல்களை அருமையாக எழுதி உள்ளீர்கள்..நன்றி.

M.R said...

வாங்க செங்கொவி நண்பரே தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி

சம்பத்குமார் said...

நண்பரே பதிவுலகில் சிற்க்க வாழ்த்துக்கள்..

நட்புடன்
சம்பத்
குழந்தை வளர்ப்பு கலைகள்

M.R said...

வாங்க சம்பத் நண்பரே தங்களை வரவேற்கிறேன், தொடர்ந்து வாருங்கள் .வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

M.R said...

வாங்க ரத்னவேல் ஐயா ,தங்கள் வருகைக்கும் ,அன்பான கருத்துக்கும் நன்றி

மாய உலகம் said...

பங்கு சந்தை பதிவு பயனுள்ளதாக இருக்கிறது .. பகிர்வுக்கு பாராட்டுக்கள்

மாய உலகம் said...

தமிழ் மணம் 5

Unknown said...

கருத்துரைக்கு மிக்க நன்றி . இன்று தான் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன் .
மௌனக் கீதம்
மகேஷ் ..

நிரூபன் said...

முதன் முதலாக உங்களின் பங்குச் சந்தைப் பதிவுப் பக்கம் வந்தேன்.
பங்கு வர்த்தகம் பற்றிய, சேர் பண்ணுவது எப்படி என்பது தொடர்பான விரிவான விளக்கத்தினைத் தந்திருக்கிறீங்க.
தொடர்ந்தும் வருவேன்.

நிரூபன் said...

ஆமா...இண்ட்லி இணைக்கவில்லையா இப் பதிவிற்கு.

RAMA RAVI (RAMVI) said...

தனி நபர் வர்த்தகம்,பார்ட்னர்ஷிப் பற்றிய் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். அருமையான தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி

ATOZ FOREX DETAILS said...


14. இண்டிகேட்டர், முதலீடு நிர்வாகம், டெக்னிகல், வர்த்தக மனநிலை , மாறாத வர்த்தகத் திட்டம் எல்லாம் கலந்த கலவைதான் வெற்றி என்பது. ஒன்றை மட்டும் வைத்து வெற்றி என்பது இயலாது. அளவுகளில் மாற்றம் உண்டு, ஆனால் அவசியம். சாம்பருக்கு காய், காரம், உப்பு ,தண்ணீர் எனபதைப் போல.

15. நேற்று லாபம் வந்தது போல் இன்றும் ,அவருக்கு லாபம் வந்து விட்டதால் உங்களுக்கும் லாபம் வர வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பணத்தில் எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். உங்கள் ப்ரோக்கர் அல்ல.

16. மார்க்கெட் சரிகின்ற பொழுது நீங்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தால் , நீங்கள் தான் சரியான முதலீட்டாளர். நேற்று நூறு ரூபாய்க்கு வாங்கிய ஒரு பொருள் அதே தரத்துடன் இன்று 50 ரூபாய்க்கு கிடைத்தால், நீங்கள் மகிழ்ச்சி தான் அடைய வேண்டும். ஆனால் நீங்கள் எப்படி, எந்த வகையில் உங்கள் பணத்தினை நிர்வாகம் செய்கிறீர்கள் என்பதைப் பொருத்து.

http://atozforexdetails.blogspot.in/2014/03/blog-post.html

Post a Comment

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...