Friday, August 26, 2011

பங்கு வர்த்தகம் செய்யும் முறைகள்

பங்கு சந்தை கற்றுக்கொள் பாகம் -6

முந்தைய பாகம் படிக்க 

நண்பர்களே கடந்த பதிவில் முதலீட்டாளர் ,வர்த்தகர் ,யூகத்தின்
அடிப்படையில் வர்த்தகம் செய்பவர் என்று பார்த்தோம்.



யூகத்தின் அடிப்படையில் என்பது சீட்டு விளையாடுவது என்பது போல அதாவது சூதாட்டம் ,தயவு செய்து இந்த முறை வர்த்தகம் வேண்டவே வேண்டாம் .

அடுத்து முதலீட்டாளர்கள் (INVESTER)என்பதையும் பார்த்தோம் ,
இம்முறையில் குறைந்த பட்சம் மூன்று அல்லது ஐந்து வருடங்கள் காத்திருந்தால் மட்டுமே நல்ல லாபம் பார்க்க முடியும் .

இதிலும் குறுகிய கால முதலீட்டாளர்கள் (SHORT TERM INVESTER)


நீண்ட கால முதலீட்டாளர்கள் (LONG TERM INVESTER )என்று 
இரு வகையினர் உள்ளனர் 

அடுத்ததாக வர்த்தகர் TRADER

இதில் தின வர்த்தகர் (DAY TRADER) ,


குறுகிய கால வர்த்தகர் (SHORT TIME TRADER),


நீண்ட கால வர்த்தகர் என்று வகையினர் உண்டு (LONG TIME TRADER) .

தின வர்த்தகர் என்பவர் வர்த்தக தினமான அன்றே பங்கை வாங்கி ,
அன்றே விற்று கணக்கை முடித்து கொள்வார் .லாபமோ ,நஷ்டமோ
இவர் வர்த்தகத்தை அன்றே முடித்துக் கொள்வார் .

ஏனென்றால் அடுத்த நாள் தொடக்கம் மற்றும் முடிவு தான் எதிர்பர்க்கமுடியாததாய் இருக்கலாம் .அதனால் பாதுகாப்பாக
அன்றே முடித்துக் கொள்வார் .

குறுகிய கால வர்த்தகர் வர்த்தக தினத்தில் வாங்கி மறு நாளோ
அல்லது அந்த வாரமோ ,அல்லது மாதமோ அதாவது அந்த மாத
எக்ஸ்பயரி தேதிக்குள் வர்த்தகம் முடித்துக் கொள்வார் .

மற்றது மூன்று மாதத்திற்குள் வர்த்தகம் முடித்துக் கொள்வார் .

சரி நண்பர்களே வர்த்தகத்தின் மூன்று நிலைகளை (முறைகள் )
பற்றி தெரிந்து கொண்டீர்கள் .

இப்பிடி வர்த்தகம் செய்ய என்னென்ன தெரிய வேண்டும் ,
எத்தனைப் பார்த்து வர்த்தகம் செய்ய வேண்டும்.

பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய ஃ பண்டமண்டல் ,டெக்னிகல் ,
யூகத்தின் அடிப்படையில் வர்த்தகம் செய்யலாம் .இந்த
தலைப்புகளை கடந்த பதிவில்ம் குறிப்பிட்டிருந்தேன் .

இந்த பதிவின் தொடக்கத்திலே சொல்லியுள்ளது போல் யூகத்தின் அடிப்படையில் பங்கு சந்தையில் வர்த்தகம் வேண்டாம் .

இது விலை ஏறும்,இது விலை இறங்கும் என்று கண்மூடித்தனமாக
தேர்வு செய்து பங்கை வாங்கி கையை சுட்டுக் கொள்ள வேண்டாம் .

மற்றபடி ஃ பண்டமண்டல் ,டெக்னிகல் தெரிந்து கொண்டால்
பங்குசந்தையில் துணிந்து வர்த்தகம் செய்யலாம் .

இவ்விரண்டையும் பற்றியும் தெளிவாக வரும் பதிவில்
பார்க்கலாம் நண்பர்களே .

அதற்கு முன் நாம் பங்குகளை வாங்கும் முன் கவனிக்க
வேண்டிய விஷங்கள் மூன்று .இதனையும் முதலீடு செய்யும்
முன் பார்க்கணும் நண்பர்களே .

முதலீட்டுக்கு முன் கவனிக்க வேண்டிய மூன்று விசயங்கள் 

நல்ல நிறுவனங்களாக பார்த்து .


நல்ல டிவிடென்ட் தரும் நிறுவனங்களாக பார்த்து 


விலை குறைவான நேரமாக பார்த்து 




நிறைய டிவிடென்ட் தரும் நிறுவனமாக இருக்கும். ஆனால்,
நிறுவனத்தின் நிர்வாகம் சரியிருக்காது.


டிவிடென்ட் தராத நிறுவனமாக கூட இருக்கும் .இதையெல்லாம்
நாம் ஃபண்டமன்டலில் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும்

ஒரு பேருந்து இருக்கு என்றால் அது எந்த இடத்திற்கு போகிறது
என்று தெரிவது தான் அடிப்படை அதாவது ஃபண்டமண்டல்.

அந்த பேருந்து எந்தெந்த வழிகளில் (ரூட்டில் ) போகிறது அல்லது
போக போகிறது என்று தெரிந்து கொள்வது தான் டெக்னிகல் விஷயம்.

எதுக்கு போக வேண்டிய இடம் தெரிந்தால் ஏறி உட்கார்ந்து கொள்ள வேண்டியது தானே என்கிறீர்களா .

ஹா ஹா போகும் வழியில் பேருந்து பஞ்சர் ஆனாலோ , ஆக்சிடன்ட் ஆனாலோ, அல்லது போகும் வழியில் ஏதேனும் பிரச்சனை ஆனாலோ
என்ன செய்வது.

சத்யம் கம்பனி கேள்வி பட்டிருப்பீர்கள் .திவால் ஆயிற்றா
(இப்பொழுது ரெகவர் ஆகிக்கொண்டுள்ளது ) ,அதில் முதலீடு
செய்தவர்கள் நிலை ?

அதனால் தான் போகும் இடமும் தெரிய வேண்டும் .வழியும்
தெரிய வேண்டும்.இடையில் பிரச்சனை என்று தெரிந்தால்
இறங்கி வேறு வண்டி மாறலாம் .

அல்லது போகும் வழியில் ஏதேனும் பிரச்சனை என்றால் வேறு
ரூட்டில் போகும் என்றால் தொடர்ந்து அதிலேயே பயணிக்கலாம் .

இப்பிடி சமயோசிதமாக தெளிவு பெற்று பங்கு சந்தையில் வர்த்தகம்
செய்ய இந்த இரண்டும் தெரிந்தும் இருக்க வேண்டும் , தெரிந்து
கொண்டேயும் இருக்க வேண்டும்.

ஏனென்றால் பண்டமண்டல் ,டெக்னிகல் இரண்டும் ஒருவண்டியில்
பூட்டிய இரண்டு மாடுகள் போல .

இந்த இரண்டைப் பற்றியும் இனி வரும் பதிவுகளில் தெளிவாக
படிக்கலாம் நண்பர்களே .

தங்கள் கருத்தும் ,வாக்கும் நிறப்பி செல்லுங்கள் நட்புகளே

16 comments:

RAMA RAVI (RAMVI) said...

நல்ல பயனுள்ள பதிவு. பங்கு வர்த்தகம் பற்றி இப்பொழுதுதான் புரிய ஆரம்பிக்கிறது எனக்கு. தொடர்ந்து எழுதுங்கள் நன்றி.

M.R said...

சகோதரி ராம்வி அவர்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

செங்கோவி said...

நன்றாகப் போகிறது..தொடருங்கள்.

M.R said...

தங்கள் கருத்துக்கு நன்றி செங்கோவி நண்பரே

சேலம் தேவா said...

தொடருங்கள்..தொடர்கிறேன். :)

M.R said...

வாங்க தேவா தங்கள் வருகைக்கு மிக்க நன்றி .
தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

தொடர்ந்து வாருங்கள்.

Yaathoramani.blogspot.com said...

அனைவரும் புரிந்து கொள்ளும்படி மிகத் தெளிவாகப்
பங்குவர்த்தகம் குறித்து சொல்லிப் போகிறீர்கள்
பயனுள்ள பதிவு
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
த.ம.4

M.R said...

நண்பர் ரமணி அவர்கள்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

கடம்பவன குயில் said...

ஏற்கனவே இந்த லைனில் இருக்கிறேன். ஆனாலும் சும்மா டீவியில் பார்த்து நானா கற்றுக்கொண்டு வந்தது தான். அடிப்படையிலிருந்து உங்கள்ட்டதான் கத்துக்கலாம்னு உங்க கட்டுரையை தொடர்ந்து கொண்டு வருகிறேன். குருதட்சணையும் தருகிறேன் குருவே.பாடங்களைத் தொடருங்கள். ஆவலுடன் தொடர்கிறேன்.

M.R said...

நண்பர் கடம்பவன் குயில் அவர்கள்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மாய உலகம் said...

பயனுள்ள பங்குசந்தை பதிவு பகிர்வுக்கு நன்றி சகோ

மாய உலகம் said...

thamil manam 6

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
பங்குச் சந்தையில் உள்ள முதலீட்டாளர்களின் வகையினை இன்று தான் அறிந்து கொண்டேன்,
தொடர்ந்தும் உங்களின் தொடரினை ஆவலுடன் எதிர்பார்கிறேன்,

Unknown said...

nallathagaval

Unknown said...

idail trader illamal neradiyaka mudaleetalargale share-halai vangavo virkkavo udiyatha?

ATOZ FOREX DETAILS said...

பங்குச் சந்தையில் ஏன் பெரும்பாலோனோர் நஷ்டம் அடைகிறார்கள்? லாபம் பெற வழிகள்.

ஒரு விசயத்தில் ஏன் தோல்வி பெறுகிறோம் அல்லது பெற்றோம் என்பதனை அறிந்தாலே,வெற்றி பெறுவது எளிது. பங்குச் சந்தையில் அனைவரும் எப்படி லாபம் பெறலாம் என்பதில் தான் கவனம் வைக்கிறார்களே ஒலிய, தோல்வி எதனால் வந்தது அல்லது வருகிறது என்பதை அறிய ஒரு பொழுதும் முற்படுவது இல்லை. நாம் இப்பொழுது பங்குச் சந்தையில் பெரும்பாலோனோர் ஏன் நஷ்டம் அடைகிறார்கள் என்பதனைப் பற்றி பார்ப்போம். இதனை தவிர்த்தாலே லாபம் பெறுவது கட்டாயம் தவிர்க்க இயலாத ஒன்றாகி விடும்.
http://atozforexdetails.blogspot.in/2014/03/blog-post.html

Post a Comment

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...