Sunday, October 2, 2011

பங்கு சந்தை கற்றுக்கொள் பாகம் -7

முந்தைய பாகம் படிக்க -பாகம் -6



நண்பர்களே முந்தைய பதிவில் முதலீட்டாளர்களின் வகைகள்

முதலீட்டுக்கு முன் கவனிக்க வேண்டியவைகள் பற்றிப் பார்த்தோம்

வர்த்தக சமயத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது
ஃபண்டமெண்டல் மற்றும் டெக்னிகள் இரண்டும் முக்கியம்
என்று பார்த்தோம் .

இதில் பண்டமெண்டல் (Funtamental) பற்றி பார்ப்போம்

ஃபண்டமென்டல் காரணம் எதற்கு என்றால் பங்குகளின் விலை
ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்வதற்கு .

இதற்கு நீங்கள் கவனிக்க வேண்டியது

அரசியல்


பொருளாதாரம்


மனிதவளம்

இவற்றை நீங்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் .ஏன்
இதன் பாத்திப்புகள் தான் பங்கு சந்தையில் பிரதிபலிக்கும் .



அரசியல் தான் நாட்டில் எதையும் முடிவு செய்யும் .இது பெறும்
பிள்ளையே பொருளாதாரம் .

அரசின் கொள்கையால் தான் பொருளாதார வளர்ச்சியும் ,
வீழ்ச்சியும் தீர்மானிக்க படுகிறது.

அதனால் தான் (பிடித்தாலும் பிடிக்க வில்லைஎன்றாலும் )
இந்த அரசியலை கவனிக்க வேண்டும் என்றேன் .

அதனை கவனித்தால் தான் பொருளாதாரம் புரிந்து கொள்ள முடியும்

அடுத்தது

பொருளாதாரம்

ஒருவர் எதற்கு முதலீடு செய்கிறார் ,டைம் பாசிற்காகவா இல்லை
நல்ல வருமானம் ஈட்ட .

அப்பிடி வருமானம் ஈட்ட வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற
சூழ்நிலை நிலவ வேண்டும்.அதுதான் பொருளாதார நிலை .

ஒருவர் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார் என்றால் எப்பிடி
தெரிந்து கொள்வோம் ,அவரது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு,
அவரது ரத்த அழுத்தம் , அவரது மூச்சு திறன் ஈசநோஃபீலியா
போன்றவைகளை செக் செய்து அவரது ஆரோக்கியம்
தீர்மானிப்போம் .



அது போல ஒரு நாட்டின் பொருளாதார நிலை அறிந்துகொள்ள
பல அளவுகோல் உண்டு .

அவற்றில் முக்கியமானவைகள் தினசரி பேப்பர்கள் படிப்பவர்கள் ,
வண்ணப்பெட்டியில் அதாவது ஊடகங்களின் மூலம் தெரிந்து
வைத்திருப்பீர்கள் .

என்னன்னு கேட்கிறீங்களா !

அது....

ஜி .டி.பி.(GDP-)-நாட்டின் மொத்த உற்பத்தி (Gross Domestic Product)


பிஸ்க்கல் டெபிசிட் Fiscal Deficit -அரசின் நிதிப் பற்றாக் குறை


இன்ஃபிளேசன் (Inflation)--பண வீக்கம்


பேலன்ஸ் ஆஃப் ட்ரேட் Balanse of Trade -நாட்டின் ஏற்றுமதி ,இறக்குமதி
வித்தியாசம்

இது இல்லாமல் இன்னும் நிறைய அளவுகோல்கள் உண்டு.

முக்கியமானது இவைகள் தான் .

இவைகள் தெரிந்து கொண்டாலே மற்றவைகள் தெரிந்து விடும் .

நண்பர்களே மற்றவை நாளை......

நன்றி









7 comments:

K said...

ஒருவர் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார் என்றால் எப்பிடி
தெரிந்து கொள்வோம் ,அவரது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு,
அவரது ரத்த அழுத்தம் , அவரது மூச்சு திறன் ஈசநோஃபீலியா
போன்றவைகளை செக் செய்து அவரது ஆரோக்கியம்
தீர்மானிப்போம் .////////

அருமையான விளக்கம் நண்பா! கடினமான விஷயங்களை இப்படி எளிமையாக எடுத்துரைப்பது, மிகவும் நல்லது! நானும் பங்குச் சந்தை பற்றி அந்துகொண்டேன்!

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

அம்பலத்தார் said...

பங்கு சந்தை நுணுக்கங்களை விபரமாக அறியவேண்டுமென்ற எனது எண்ணத்தை உங்கள் பதிவுகள் ஈடுசெய்கின்றன. உங்கள் தொடர்ந்த பதிவுகளை எதிர்பார்த்திருக்கிறேன்.

M.R said...

தொடர்ந்து வரும் நண்பரே

RAMA RAVI (RAMVI) said...

அருமையான விளக்க பதிவு ரமேஷ். பகிர்வுக்கு நன்றி.

gold bubble பற்றி விளக்க முடியுமா? தெரிந்து கொள்ள அவலாக இருக்கிறது.

Unknown said...

pls post again na.... we will need ur knowledge

ATOZ FOREX DETAILS said...

பங்குச் சந்தை பற்றிய மாறவே மாறாத உண்மைகள்:

1. பங்குச் சந்தை என்பது நூறு சதவிகிதம் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.

2. எங்க டிப்ஸ், இண்டிகேட்டர், ரோபோட், சாப்ட்வேர் யூஸ் பண்ணுங்கள் ரிஸ்க் இல்லாமல் பணம் பண்ணலாம் என்பவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள். ரிஸ்க் கட்டாயம் இருக்கிறது. எவ்வளவு ரிஸ்க் எடுகிறோமோ அவ்வளவு பணம் பண்ணலாம் என்பதே உண்மை. ரிஸ்க் என்பதைக் கட்டாயம் தவிர்க்க முடியாது, ஆனால் எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதை வேண்டுமானால் முன்கூட்டியே முடிவு செய்ய இயலும்.

http://atozforexdetails.blogspot.in/2014/03/blog-post.html

Post a Comment

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...