Wednesday, July 27, 2011

பங்கு வர்த்தகம் செய்வதற்கு

பாகம் -1

நண்பர்களே வணக்கம்

இந்த வலைப்பூவில் நான் இதுவரை கற்றுக்கொண்ட பங்கு சந்தை பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன் .

முக்கியமாக பங்குசந்தையில் வர்த்தகம் செய்யும்பொழுது நாம் கவனிக்க வேண்டியது FUNDAMENTAL     AND      TECHNICAL    ANALYSING
சில பங்குகளைப்பற்றிய தினவர்த்தகத்துக்கான எனக்கு தெரிந்த குறிப்புகள்
என்பது போன்றவைகளை பகிர்ந்து கொள்ள போகிறேன்


பங்கு சந்தை வர்த்தகம் செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை 

பங்குசந்தை பற்றிய விவரங்கள் ஏதும் தெரியாத நிலையில் பங்கு
சந்தையில் இறங்க வேண்டாம் .

சொந்த பணம் தவிர வேற (கடன் போன்றவை ) பணத்தினை
முதலீடு செய்ய வேண்டாம்

பிறரை நம்பி பங்கு சந்தையில் இறங்க வேண்டாம்
மற்றவர்கள் தரும் வர்த்தக குறிப்புகளை முழுதும் நம்ப வேண்டாம்

பங்கு சந்தையில் இறங்கும் முன்பே இவ்வளவு தான் முதலீடு என்று தீர்மானம் செய்துவிட்டு இறங்கவும் .

உதாரணம்

ஐம்பதாயிரம் என்றால் ஐம்பதாயிரம் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் .அதில் நீங்கள் ஜெயிக்க வில்லை என்றால் பங்கு வர்த்தகத்திளிருந்து விலக வேண்டும்என்ற மனப்பான்மை உறுதியோடு கடைப்பிடியுங்கள்

விட்டது பிடிப்போம் என்ற மனப்பான்மை வேண்டவே வேண்டாம் .
பங்கு சந்தையில் இறங்கிய பின்பு கற்றுக் கொள்வோம் என்ற தீர்மானமும் வேண்டாம் .

பங்குசந்தையில் இறங்கிய பிறகு நாம் முதலீடு செய்த பணத்தில்
 மூன்றாக பிரித்து முதல் பிரிவை வர்த்தகத்திற்கும் ,இரண்டாம்
 பிரிவை ஆவேரஜிற்கும் ,மூன்றாம் பிரிவை எமேர்ஜென்சிற்கும் பயன்படுத்த வேண்டும் .

குறிப்பாக எதையும் தாங்கும் உறுதியான மனப்பான்மை உள்ளவர்கள் மட்டுமே பங்கு வணிகம் செய்ய வேண்டும் .
மற்றவர் விலக வேண்டும் .

உங்களுக்கு எந்த அளவிற்கு வருமானம் வேண்டும் என்ற தீர்மானம் முன்பே ஏற்படுத்திக்கொள்ளுங்கள் உதாரணத்திற்கு தினந்தோறும் இவ்வளவு,அல்லது வாரம் இவ்வளவு அல்லது மாதம் இவ்வளவு என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

சரி நண்பர்களே இதைப்பற்றி மேலும் நாளைப் பார்க்கலாம் 

6 comments:

RAMA RAVI (RAMVI) said...

நல்ல தகவல் பகிர்வு ரமேஷ்.தொடர்ந்து எழுதவும்,பங்குசந்தை பற்றி விவரம் அறிந்து கொள்கிறோம்.

M.R said...

வாருங்கள் ராம்வி ,தங்கள் ஆதரவிற்கு நன்றி சகோதரி

Tamil whatsapp stickers and png images said...

பங்கு வர்த்தகம் பற்றிய பதிவு பலருக்கும் பயனுள்ளதாக அமையும்! பாராட்டுக்கள்.

ஈகரை vote button ஏன் இவ்வாறு வருகிறது!
http://eegaraisivi.blogspot.com/ இங்கு என் தளத்தில் சரியாக உள்ளதே!

மேலும் உங்கள் தளத்தை Eegarai topsite-ல் இணைத்துக் கொள்ளுங்கள்.

http://www.eegarai.com/topsites/

மாணவன் said...

அன்பின் நண்பருக்கு இனிய வணக்கம்,
உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!

stalin wesley said...

பங்கு சந்தை பற்றி அருமையான வலை பதிவு

ADMIN said...

நல்ல பயனுள்ள பதிவு. பங்கு சந்தையைப் பற்றிய அறிவை வளர்க்கப் பயன்படும்.

Post a Comment

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...