பங்கு சந்தை கற்றுக்கொள் பாகம் -2
பாகம் ஒன்று படிக்காதவர்கள் படிக்க இங்கு கிளிக் செய்யவும்
மற்ற விசயங்கள் அடுத்த பதிவில் பார்ப்போம் நண்பர்களே
பாகம் ஒன்று படிக்காதவர்கள் படிக்க இங்கு கிளிக் செய்யவும்
நண்பர்களே வணக்கம்
கடந்த பதிவில் நாம் பங்கு சந்தையில் என்ன என்ன செய்ய
கூடாது என்று பார்த்தோம் .
கூடாது என்று பார்த்தோம் .
இப்பொழுது பார்க்க போவது அடிப்படை
உங்களுக்கு தெரிந்த விஷயம் தான்
நல்ல திடமான மனப்பக்குவம்
பொறுமை
டீமேட் அக்கவுன்ட்
பணம்
நல்ல திடமான மனப்பக்குவம்
இது எதுக்குன்னா எதிலுமே வெற்றி தோல்வி சகஜம் .அதிலும் பங்கு சந்தையில் சிறிது கவனம் பிசகினாலும் நஷ்டம் ஏற்படும் .
அதை தாங்கும் மனப்பக்குவம் வேண்டும் .ஏற்படும் தோல்வியால் பதட்டம் கொண்டால் அதன் பிறகு செய்யும் ஒவ்வொரு டிரேடும் தவறாக போக வாய்ப்புண்டு .
பொறுமை
பொறுமையாக நாம் விலை மாற்றங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும் .
நமக்கு வாய்ப்பாக தோன்றும் சமயத்தில் தான் நாம் இறங்கி செயல் படவேண்டும்.
டீமேட் அக்கவுன்ட்
என்றால் என்ன வென்று அனைவருக்கும் தெரியும் .பொருட்களை வாங்கி விற்க ஒரு கணக்கு தேவைப்படும் . அதை நிர்வகிக்க ஒரு லெட்ஜர் போன்ற நோட் புக்கில் எழுதி வைப்போம் .
பொருட்களும் கண்ணில் பார்க்கலாம் .
ஆனால் பங்கு சந்தையில் பொருட்களை கண்ணில் பார்க்க முடியாது .எல்லாமே கணக்கு மட்டுமே .
நாம் பொருள் வாங்கினாலும் ,விற்றாலும் நம் டீமேட் அக்கவுன்ட்
கணக்கில் வரவு வைக்க படும் .
இதற்க்கு எந்த பொருளும் (நோட் ) தேவையில்லை .எல்லாம் கணினி வழி
(இயந்திரம் ). பொருள் (metterial) எதுவும் தேவைப் படாததால் இதை Dematerialisation அக்கவுன்ட் என்பதன் சுருக்கமாக டீமேட் அக்கவுன்ட்
என்று அழைக்கிறார்கள் .
பணம்
முந்தய பதிவிலேயே சொல்லியிருக்கிறேன் .சொந்த பணம் ,அதவும் மீதமுள்ள பணம் .(வீட்டில் அத்தியாவசியமான பணம் எடுத்து உபயோகிக்க வேண்டாம் )
திருமணம் ,படிப்பு , போன்ற முக்கியமான காரியங்களுக்காக வைத்துள்ள
பணம் எடுத்து உபயோகிக்க வேண்டாம்
எவ்வளவு முதலீடு என்பதை முன்கூட்டியே தீர்மானம் .
முக்கியமா பேங்க் அக்கவுன்ட் இருக்கணும் இது எல்லாருக்கும் தெரியும் என்பதால் இதை குறிப்பிட வில்லை .
நண்பர்களே மற்றபடி பங்கு சந்தை குறித்து அடிப்படையான விசயங்கள் தங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் .
10 comments:
தொடக்கம் அருமை
உபயோகமான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.
நல்ல பகிர்வு நண்பரே..வர்த்தகம் என்பது அதிக ஆபத்தானது இல்லையா.
முதலீடு-வர்த்தகம் இரண்டையும் இரு வேறு வகையில் அணுக வேண்டும் இல்லையா..அதையும் அடுத்து விளக்கமாகச் சொல்லவும்.
வாங்க மாய உலகம் வாழ்த்துக்கு நன்றி
தமிழ்மணத்தில் இணைய வில்லையா?
வாங்க ராம்வி ,வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி சகோ
வாங்க செங்கோவி
வருகைக்கு நன்றி ,அதிக ஆபத்து தான் நண்பரே .
கவனக் குறைவாக இருந்தால் குழி தோண்டி புதைக்கும் .
அதன் மேல ஏறி சிரிக்கும்
கண்டிப்பாக செங்கோவி ,
முதலீடு வேறு ,வர்த்தகம் வேறு
அதை அணுக இரு கோணங்கள் உண்டு .
பிற்பகுதியில் அதைப் பற்றி விரிவாக பார்ப்போம் நண்பரே
பேரசைபட்டா
Post a Comment
உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்